துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பாக ஸ்ரீதேவி பதிலளித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜான்வி தற்போதுதான் பட்டப் படிப்பை முடித்துள்ளார். அவருக்குப் படிப்புமீது கவனம் இருக்கவேண்டும். செய்திகளில் வெளிவந்ததுபோல ஜான்வி எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மிகவும் சிறிய பெண். நடிப்பது குறித்து யோசிக்கும் வயதில்லை இது. ஜான்வி சினிமாவில் நடிப்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். நான் நடிகையாகவேண்டும் என்று ஒருபோதும் திட்டமிட்டதில்லை’ என்று ஸ்ரீதேவி கூறியுள்ளார்.