செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் | 25 ஆக பலி எண்ணிகை உயர்வுஅடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் | 25 ஆக பலி எண்ணிகை உயர்வு

அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் | 25 ஆக பலி எண்ணிகை உயர்வுஅடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் | 25 ஆக பலி எண்ணிகை உயர்வு

1 minutes read

அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர்
மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே படையினரும் கரம் கோர்த்தனர்.

இந்த படைகளை எதிர்த்து சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ந்த நிலையில், தலைநகர் சனாவில் போலீஸ் பயிற்சி கல்லூரி அருகில் அமைந்துள்ள பாலிலி மசூதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்திருந்த நபர், அவற்றை வெடிக்கச்செய்தார். குண்டுவெடித்தபோது மக்கள் உயிர் பிழைப்பதற்காக ஓட்டம் எடுத்தனர். அதைத் தொடர்ந்து மசூதியின் நுழைவாயிலில் மற்றொருவரும் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினார். அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புகளால் மசூதி பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஆங்காங்கே மனித உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.

இந்த தாக்குதல்களில் 25 பேர் உடல் சிதறி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.