செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரூ.1.3 கோடிக்கு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை டார்வினின் கடிதம் விற்பனை!ரூ.1.3 கோடிக்கு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை டார்வினின் கடிதம் விற்பனை!

ரூ.1.3 கோடிக்கு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை டார்வினின் கடிதம் விற்பனை!ரூ.1.3 கோடிக்கு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை டார்வினின் கடிதம் விற்பனை!

1 minutes read

பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 1.97 லட்சம் டாலர்களுக்கு (சுமார் ரூ.1.3 கோடி) விற்பனையானது.
நியூயார்க் நகரிலுள்ள ஏல மையத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், எதிர்பார்த்ததைவிட இரு மடங்குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனையானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்தகத்தை தாம் புனித நூலாகக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கடவுளின் குழந்தை என நம்பவில்லை எனவும் டார்வின் குறிப்பிட்டுள்ளார்.
மத நம்பிக்கையற்ற டார்வின், மத நம்பிக்கை கொண்ட தனது நண்பர்கள், உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அது குறித்து வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், மதம் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்குமாறு டார்வினின் நண்பர் மெக்டெர்மட் என்பவர் அவருக்கு கடிதம் எழுதினார்.
அது குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் மெக்டெர்மட் வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கடிதம் மூலம் டார்வின் தெளிவுபடுத்தினார். மெக்டெர்மட்டும் அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். 100 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதம் குறித்து வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.