செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவுஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவுஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு

1 minutes read

கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றிரவு நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகளுடன் புரிந்துணர்வுக்கு சிறிலங்கா வந்திருக்கிறது.

இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

நாம் நீண்டகாலத்துக்கு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாது. நாம் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறோம்.

பிரதான மீறல்கள் குறித்து, சிறிலங்காவின் நீதிப் பொறிமுறையின் கீழ், நாட்டின் சொந்த சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு,  விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் இலங்கையர்களுடன் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டவாளர்களும் பங்கேற்பர்.

ஆனால் இவை அனைத்தும், சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமையவே இடம்பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.