செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பதினோராவது மணமகளாக குடும்ப கவுனை அணியும் பெண் | 120 ஆண்டுகள் பழமையான கவுன்பதினோராவது மணமகளாக குடும்ப கவுனை அணியும் பெண் | 120 ஆண்டுகள் பழமையான கவுன்

பதினோராவது மணமகளாக குடும்ப கவுனை அணியும் பெண் | 120 ஆண்டுகள் பழமையான கவுன்பதினோராவது மணமகளாக குடும்ப கவுனை அணியும் பெண் | 120 ஆண்டுகள் பழமையான கவுன்

1 minutes read

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் அம்மாவின் திருமண கவுனை தனது திருமணத்தின்போது அணிய பல மகள்களும் ஆசைப்படுவர். அவர்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளி சுமார் 120 ஆண்டுகள் பழமையான, தனது கொள்ளுப் பாட்டியின் கவுனை பதினோராவது மணமகளாக தனது திருமணத்தில் அணிய விரும்பிய பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முதன்முறையாக 1895-ம் ஆண்டு திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த கவுன், பத்து மணப்பெண்களின் கைகள் மாறி அபிகெய்ல் கிங்ஸ்டன் என்கிற அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கொஞ்சம் பொலிவிழந்த நிலையில் கிடைத்துள்ளது.

120 ஆண்டுகளுக்குப் பின்னும், பொலிவுடன் ஒரு ஆடை இருக்க முடியாது எனத் தெரிந்தாலும், தமது குடும்ப மூதாதையருடன் தன்னையும் இணைக்கும், இந்த ஆடையை அணிய விரும்பிய அபிகெய்ல், ஆடை வடிவமைக்கும் பெண் ஒருவரிடம் தனது கவுனை மறுசீரமைக்கக் கொடுத்துள்ளார்.

சுமார் இருநூறு மணிநேர உழைப்புக்குப் பின்னர், இதை மீண்டும் புதுப் பொலிவுடன் அவர் அபிகெய்லிடம் இதை ஒப்படைத்துள்ளார். இவ்வளவு பழைய கவுனுக்கு இந்தக் கடின உழைப்பு தேவையா எனக் கேட்கும் நண்பர்களிடம், அவர் இந்த கவுனை அணிய பன்னிரெண்டாவது மணமகளும் தயாராகிவிட்டதைத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.