செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் திருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலி | ஏமன் நாடுதிருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலி | ஏமன் நாடு

திருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலி | ஏமன் நாடுதிருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலி | ஏமன் நாடு

0 minutes read

உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் உள்ள ஏமன் நாட்டில் திருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலியாகியிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஏமனின் மோசாவிற்கருகில் உள்ள ரெட் சீ துறைமுகத்திற்கு அருகேயுள்ள கிராமத்தில் இரண்டு வீடுகள் ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த ஒருவருக்கு அங்கு திருமண நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சவுதி தலைமையிலான கூட்டுப்படையினரின் யுத்த விமானங்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக ஏமன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் கலகப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாமென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.