செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 30 கால்பந்து பள்ளிகளை சீனாவில் தொடங்கும் ரொனால்டோ 30 கால்பந்து பள்ளிகளை சீனாவில் தொடங்கும் ரொனால்டோ

30 கால்பந்து பள்ளிகளை சீனாவில் தொடங்கும் ரொனால்டோ 30 கால்பந்து பள்ளிகளை சீனாவில் தொடங்கும் ரொனால்டோ

1 minutes read

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 15 கோல்கள் அடித்து 2-ம் இடத்தில் இருப்பவர் ரொனால்டோ. இவர் பிரேசில் அணிக்காக மூன்று முறை உலகக்கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். இதில் இரண்டு முறை பிரேசிலுக்கு சாம்பியன் பட்டம் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ரொனால்டோ சீனாவில் 30 கால்பந்து பள்ளிகளை தொடங்க இருக்கிறார். இதன்மூலம் சீனா உலகக் கோப்பையில் முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் தீவிர கால்பந்து பிரியர். ஒலிம்பிக், தடகள சாம்பியன்ஷிப் என பல்வேறு போட்டிகளை நடத்தி அசத்தியுள்ள சீனா எப்படியாவது கால்பந்து உலகக்கோப்பையை நடத்தி விட வேண்டும் என்று இவர் நினைக்கிறார். அதிபரின் இந்த சிந்தனைக்குப் பின்னால் ரொனால்டோவின் முயற்சி இருப்பதாக கருதப்படுகிறது.

இதற்காக பீஜிங், ஷாங்காய், ஷென்சென் ஆகிய இடங்களை ரொனால்டோ குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தனது முதல் பள்ளியை தொடங்க ரொனால்டோ திட்டமிட்டுள்ளார். இதற்காக முழு நிதி திரட்டுதல் போன்ற முக்கிய வேலைகளை வேகமாக செய்து வருகிறார்.

39 வயதாகும் ரொனால்டோ தனது கால்பந்து பள்ளிகள் குறித்து கூறுகையில் ‘‘சீனாவில் நான் இந்த கால்பந்து பள்ளிகளை திறப்பதற்கு வியாபார நோக்கத்தை தவிர முக்கியமான காரணம் என்னவென்றால், இங்கு ஏராளமான கால்பந்து ரசிகர்களும் வீரர்களும் உள்ளனர். அதேபோல் சீன அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் கால்பந்து முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

என்னுடைய கால்பந்து பயிற்சி முறை சீன வீரர்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சீன வீரர்கள் பெரிய அடித்தளத்தையும் உறுதியையும் பெற்றுள்ளனர். ஆனால், இன்னும் முறையாக கருத்தாக்கம் மற்றும் பயிற்சி முறை இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.