அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்துக்குள்பட்ட ரோஸ்பெர்க் நகரில் உள்ள உம்ப்குவா சமுதாயக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிந்தாக, உள்ளூர் செய்தியை மேற்கோள்காட்டி, சி.என்.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காலை 10:40 மணியளவில் கல்லூரி வளாகத்தில் திடீரென புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதாகவும், இதில், ஒரு பெண் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் படுகாயமடைந்தனர் எனவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சமுதாயக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை டக்ளஸ் நகர மேயர் அலுவலக பெண் அதிகாரி உறுதி செய்தார். போலீஸாரும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்ய போதிலும், இறந்தவர்கள் குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை என்று கூறினர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0