செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 6 பேரை கொலை செய்த கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை6 பேரை கொலை செய்த கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை

6 பேரை கொலை செய்த கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை6 பேரை கொலை செய்த கொலையாளிக்கு அமெரிக்காவில் மரண தண்டனை

1 minutes read

அமெரிக்காவில் தொடர்ச்சியாக பலரைக் கொலை செய்தவருக்கு அந்த நாட்டின் வர்ஜினியா மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆல்ஃபிரடோ பிரீடோ (49) என்ற அந்த நபருக்கு, வர்ஜினியா மாகாணத்தின் ஜரட் என்னும் நகரிலுள்ள சிறையில் விஷ ஊசி மூலம் வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வர்ஜினியா மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு மன நோயாளி என்று ஆல்ஃபிரடோ பிரீடோ கூறி வந்த நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ளாத கலிஃபோர்னியா நீதிமன்றம், மரண தண்டனை நிறைவேற்றத்துக்காக அவரை வர்ஜினியா அனுப்பியது.
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 22 வயது பெண்ணையும், அவரது காதலரையும் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த வழக்கில் பிரீடோவுக்கு மற்றொரு மரண தண்டனை வழங்கப்பட்டது.
கலிஃபோர்னியா, வர்ஜினியா மாகாணங்களில் 6 பேரை கொலை செய்ததாக பிரீடோ மீது வழக்குகள் உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.