போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததால் கிடைத்த சம்பளம் ரூ.16 கோடியை நடிகர் கமலஹாசன் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக வழங்கியுள்ளார்.
இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காது கமலஹாசன்,வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய இந்த விளம்பரத்தில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாக பெற்ருள்ளார்.
இந்த சம்பளத்தின் முழு தொகையும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு வழங்கியுள்ளார். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வரும் பெற்றால்தான் பிள்ளையா? என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அந்த தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாசன் ஒரு பேட்டியின் போது, தான் என்றாவது விளம்பர படங்களில் நடிக்க நேர்ந்தால், அதில் கிடைக்கும் வருவாயை ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக செலவழிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்படத்தக்கது.