செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முழு விசாரணையையும் இலங்கையே நடத்தும் | அதிபர் சிறீசேனாமுழு விசாரணையையும் இலங்கையே நடத்தும் | அதிபர் சிறீசேனா

முழு விசாரணையையும் இலங்கையே நடத்தும் | அதிபர் சிறீசேனாமுழு விசாரணையையும் இலங்கையே நடத்தும் | அதிபர் சிறீசேனா

1 minutes read

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையே முழு விசாரணையையும் நடத்தும் என்று அந்நாட்டு அதிபர் சிறீசேனா தெரிவித்தார்.

இதுதொடர்பாக இலங்கைத் தலைநகர் கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது:

ஒரு நாடு என்ற முறையில் நாங்கள் முன்னேற்றம் காணவும், நாட்டில் மீண்டும் இன மோதல் நடைபெறாமல் தடுக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறியும் பொருட்டு, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து மதக் குழுக்களும் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து எங்கள் நாடே முழு விசாரணை நடத்தும். இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு விசாரணை நடத்தப்படும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், அந்தத் தீர்மானத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டதும், எனது அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.

அந்தத் தீர்மானத்தில், பொறுப்புணர்வை உறுதி செய்ய சர்வதேச சட்ட நிபுணர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவது மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை நடத்துவது குறித்து எந்த அச்சுறுத்தலும் இல்லை.

வெளிநாடுகளுடனான இலங்கையின் உறவை எனது அரசு மேம்படுத்தியுள்ளது. நான் மேற்கொண்ட முதன்மையான பணிகளில், அதிபர் மீதான சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை மீண்டும் கிடைக்கச் செய்வதும் ஒன்றாகும் என்றார் சிறீசேனா.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் ùஸய்த் ராத் அல் உசேன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சர்வதேச நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், பிரபல வழக்குரைஞர்கள், விசாரணை அதிகாரிகள் கொண்ட பன்னாட்டு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஸெய்த் ராத் அல் உசேனின் அறிக்கையை இலங்கை ஏற்கவில்லை.

அதேசமயம், அந்த அறிக்கைக்கு தமிழ் சிறுபான்மையின மக்களும், சர்வதேச மனித உரிமை குழுக்களும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான கருத்துகளை கொண்ட தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் இலங்கையுடன் இணைந்து கொண்டு வந்தன.

அதற்கு மற்ற 39 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன. எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காததால், இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.