செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷ்ய போர்விமானங்கள் துருக்கி வான்பரப்பில் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது | நேட்டோ கண்டனம்ரஷ்ய போர்விமானங்கள் துருக்கி வான்பரப்பில் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது | நேட்டோ கண்டனம்

ரஷ்ய போர்விமானங்கள் துருக்கி வான்பரப்பில் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது | நேட்டோ கண்டனம்ரஷ்ய போர்விமானங்கள் துருக்கி வான்பரப்பில் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது | நேட்டோ கண்டனம்

0 minutes read

துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை அன்று  சிரியாவுடனான எல்லை அருகில் துருக்கியின் வான் பரப்பில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது. மேலும் துருக்கிய வெளியுறவு மந்திரி பெரீதுன் சினிர்லியோக்லு ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கெய் லவ்ரொவ்வை தொடர்புக்கொண்டு தனது வலுவான எதிர்ப்பைப் பதிவுசெய்ததோடு, ‘இனிமேல் இப்படியான அத்துமீறல்கள் நடந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டிவரும்’ என்று எச்சரித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் அவர் விவாதித்துள்ளார். கடந்த 1949ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேட்டோ நாடுகளின் அமைப்பில் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதனிடையே நேட்டோ நாடுகளின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் நுழைவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.