அமெரிக்காவின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க வடகொரியா தயாராகவே இருப்பதாக, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் வுன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 70-வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், மக்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் வுன் உரையாற்றினார்.
அப்போது “நமது புரட்சிகரமான படை, அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்பும் எந்தகைய போருக்கும் பதிலடி கொடுக்கும். நமது ராணுவம் வலிமையான ஒன்றாக இருப்பதோடு, யாரும் நுழைய முடியாத கோட்டையாக, சர்வதேச சக்தியாக உள்ளது.” என்று கூறினார்.