செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாகிஸ்தானின் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்டது 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாகிஸ்தானின் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்டது

81 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாகிஸ்தானின் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்டது 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாகிஸ்தானின் அரசியல் தலைவருக்கு வழங்கப்பட்டது

1 minutes read

பாகிஸ்தானின் ஐக்கிய தேசிய இயக்கம் (எம்.க்யூ.எம்.) கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசைனுக்கு 81 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வரும் அல்தாஃப் ஹுசைன், ரூ.24 லட்சம் (பாகிஸ்தான் மதிப்பில்) அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த நீதிமன்றம் கூறியது.
பாகிஸ்தான் ராணுவம் குறித்தும், பிற பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் விமர்சித்து வருபவர் அல்தாஃப் ஹுசைன்.
கராச்சி நகரில் படைகளை அனுப்புமாறு நேட்டோ அமைப்பையும், ஐ.நா.வையும் அவர் கடந்த ஜூலை மாதம் கோரி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவருக்கு எதிராக பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசத் துரோகம், வன்முறையைத் துண்டியது, நாட்டுக்கும், ராணுவத்துக்கும் எதிராகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கில்ஜிட் நகர பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், அவருக்கு 81 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாகிஸ்தான் மதிப்பில் 24 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராஜா ஷாபாஸ் கான் தீர்ப்பு வழங்கினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.