இலங்கையில் தமிழர்கள் நலனுக்காக, காந்திய வழியில் பாடுபட்ட இரண்டு தலைவர்கள், கடந்த 3 நாள்களில் மறைந்துள்ளனர்.
“காந்தியம் டேவிட்’ என்று அழைக்கப்பட்ட காந்திய சமூக ஆர்வலர் டாக்டர் எஸ்.ஏ.டேவிட் (92), கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவரைத் தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவரும், தோட்டத் தொழிலாளர் துறையின் முன்னாள் அமைச்சருமான கே.வேலாயுதம் (66), சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவர் அமைச்சராக பதவி வகித்தபோது, தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீட்டுமனைப் பெற்றுத் தந்தவர்.
அஹிம்சை வழியில் அயராது மக்களுக்கு பாடுபட்ட இரு தலைவர்களின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
1