செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

6 minutes read

தமிழ் இலக்கிய வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்கும் சங்க இலக்கியப் பதிவுகள் வாசக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், குடவோலை கண்ட தமிழரின் பெருமையை இப் பதிவில் எழுதியுள்ளார் ஜெயஸ்ரீ சதானந்தன். உலகில் ஜனநாயக தேர்வு முறையை அறிமுகப்படுத்துவதிலும் தமிழர் வாழ்வு முன்னோடி மரபாக இருந்துள்ளது என்பதை கட்டியம் கூறுகிறது இப் பதிவு.

-ஆசிரியர்

மக்களிடமிருந்து பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்க இவ்வாறு ஊர் ஊராகக் குடவோலை இடும் முறை, அதாவது குடத்திற்குள் பெயர் எழுதிப் போடும் முறையில் அந்நாளில் “தெளிவு” அதாவது தேர்தல் நடத்தி வந்தனர். குடவோலையை குழிசி ஓலை என்றும் அழைத்து இருக்கின்றனர்.

அகநானூறு 77

இதில் மருதன் இள நாகனார் எனும் புலவர்,
“கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவணமாக்களின்” என பாடுகின்றார்.
இந்தப் பாடலின் பொருள் என்னவெனில் கயிற்றினால் பிணைக்கப்பட்டுள்ள குடத்தின் கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக் கொள்வதற்கு அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆராய்ந்து பார்த்தபின் அதனை நீக்கி ஆவணமாக்கள்( ஊர் மன்ற முதன்மை உறுப்பினர்) தெரிந்தெடுக்கப்படுபவர். இவ்வாறு பானையில் உள்ள கட்டை அவிழ்த்து ஒரு ஓலையை ஊர்மக்கள் எடுப்பது போல கழுகு ஆனது வெற்றி வீரனின் குடலை பிடுங்கி எடுக்கும் என்று வருகின்றது.

சங்க காலத் தேர்தல் முறைகள்

சங்க காலத்தில், சிற்றூர்களில் ஆட்சி மன்றங்கள் இருந்தன. அம்மன்ற உறுப்பினர்கள் ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊரின் ஒவ்வொரு பகுதியினரும் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை ஓலை மூலம் தேர்ந்தெடுத்தனர். வாக்காளரின் பெயர் குறிப்பிடப்பட்ட ஓலைகள் குடத்தினுள் இடப்படும். அக்குடத்தின் மேல் அரசாங்க முத்திரை அதாவது இலாஞ்சினை இடப்பட்டு கட்டப் பட்டிருக்கும். பின்னர் அந்தக் கட்டினை நீக்கி ஒவ்வொரு ஓலையாகப் படிப்பர். இவ்வாறு பெரும்பாலோரால் தேர்ந்தெடுக்கப்படுபவர், ஊர் மன்றத்தின் முதன்மை உறுப்பினராக ஆக்கப்படுவர்.

கிராமத்தில் மக்கள் ஒன்று கூடி தகுதியான உறுப்பினர்களின் பெயர்களை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பெரிய குடத்தில் போடுவார்கள். அந்த வாக்காளர்களுக்கு ஒழுக்கம் சரியாக இருக்கின்றதா? எனப் பார்த்தே அவர்களை தெரிந்தெடுத்து ஓலையில் எழுதி குடத்தில் போடுவார்கள். அத்தோடு அந்த வாக்காளர்களின் தூரத்து
உறவினர்கள் (அதாவது ஒன்று விட்ட உறவினர், அதற்கு அடுத்த சுற்று உறவினர், அதற்கும் அடுத்த சுற்று உறவினர்) கூட எந்த வித ஒழுக்கக் கேட்டிலும் இருந்திருக்கக் கூடாது.
இந்த வாக்காளர்கள் கல்வி அறிவுடன் தூய வழியில் பொருளீட்டி வாழ்பவர் என்ற தகுதி இருக்கிறதா என்பதையும் உறுதி செய்தே அவர்களின் பெயர் தாங்கிய ஓலை குடத்தில் போடப்படும்.

பிற்காலத்தில் இந்தக் குடவோலை முறையானது சோழர் அரச முறையாக, ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. இந்த முறையானது, முதலாம் பராந்தகச் சோழனின் ஆட்சியிலும் இருந்ததாக உத்திரமேரூர் கல்வெட்டுகள் நமக்கு சான்று கூறுகின்றன.

இன்றைய ஜனநாயக தேர்தல் முறையானது மேலத்தேய நாடுகளிலிருந்து எமக்கு அறிமுகமானது என்று நாம் தவறாக எண்ணிக் கொண்டிருக்க, இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பே நமது மூதாதையர் இந்த ஜனநாயகத் தேர்தல் முறையை உலகுக்கு காட்டியுள்ளனர் என்பது இந்தப் பதிவின் மூலம் எமக்குப் புலன் ஆகின்றது.

பல நாடுகளில் நாகரிகங்கள் தோன்றும் முன்னரே, அன்றைய காலகட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடவோலைத் தேர்தல் முறையை நாம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதில் பெருமிதம் அடைவோம். எமது சந்ததிக்கும், இப்படியான பல அருமைகளையும் பெருமைகளையும் பறை சாற்றுவோம்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More