செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

0 minutes read

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இஸ்ரேலிய நாட்டின் ஹீப்ரூ பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனத்தை தொடர்ந்து தற்போது, இஸ்ரேல் நாட்டில் உள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமிற்கு நேற்று சென்றடைந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இஸ்ரேல் பாராளுமன்றத்திலும் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

இந்நிலையில் ஹீப்ரூ பல்கலைக்கழகம் சார்பில் இன்று அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ‘இந்திய பொருளாதாரத்தில் மேற்கொண்டுள்ள ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, உயர் கல்வியில் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை, இந்திய-இஸ்ரேலிய உறவுக்கு நீண்டகாலமாக குரல் கொடுத்து வருவது’ உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.