இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்து விசாரிக்க சிறப்பு அதிபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதற்கு ராஜபக்சே தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை கண்டு கொள்ளாத சிறிசேனா அரசு நிராகரித்தது.
அதைத் தொடர்ந்து ராஜபக்சே கடந்த 2 நாட்களாக விசாரணை குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். விசாரணையின் முடிவில் தனக்கு வழங்கப்படும் தண்டனையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே மேல்முறையீடு செய்கிறார்.
இத்தகவலை ராஜபக்சே நிருபர்களிடம் தெரிவித்தார். மேல்முறையீடு செல்லும் உரிமை தனக்கு இருப்பதாகவும், அதை கொண்டே தான் விசாரணையில் பங்கேற்று வருவதாக தெரிவித்துள்ளார்.