ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் புலி முத்திரை அல்லது புலிச் சின்னத்திற்கு முக்கிய இடமுண்டு. சங்க இலக்கியத்திலும் அதன் சான்றுகள் இருப்பது எமக்கு இன்னமும் பெருமை அளிக்கிறது. தமிழர் வாழ்வின் அத்தனை பரிமாணங்களின் தாய்நில மேடாக இருக்கும் சங்க இலக்கியப் பாடல்கள் குறித்த ஜெயஸ்ரீ சதானந்தன் அவர்களின் ஆய்வுக் கட்டுரையில் இது தனிச் சிறப்பு வாய்ந்தது என்றால் மிகையில்லை.
-ஆசிரியர்
சங்க இலக்கியங்களான பதினெண் மேற்கணக்கு, பத்துப்பாட்டில் இடம் பெறுவது பட்டினப்பாலை எனும் நூல். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர் சோழ நாட்டின் சிறப்பு, அதன் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் (பின்னாளில் இப்பட்டினம் கடல் கோளினால் தன்னை மறைத்துக் கொண்டது) கொண்ட செழுமை, செல்வ வளம், மக்களின் வாழ்வியல் முறை என்பவற்றை இவ் இலக்கிம் மூலம் நமக்குக் காட்டுகின்றார்.
பட்டினப் பாலை வணிக மக்களைப் பற்றிய பதிவுகளை உடைய நூலாகும். இதைக் “காலத்தின் கண்ணாடி” என்றும் கூறுவர். எமது பண்டைய வாழ்வியல் முறைகள் இந்நூலில் எமது சொத்துகளாக கொட்டிக் கிடக்கின்றன.
சோழவள நாட்டின் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையில், இந்த நூலில் மாடமாளிகைகள் கொண்ட வீதிகள் அகன்று இருந்தன என்றும், வீட்டு முற்றத்தில் காய வைத்துள்ள நெல்லை உண்ண வந்த கோழியை, பொன்னாலான காதணிக் குண்டலத்தை எறிந்து விரட்டும் அளவிற்கு மிகுந்த செல்வமுடையவர்களாக இல்லறத்தார் இருந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, நமது முன்னோரின் வணிக முறைமையை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.
“வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறைபடாது” (124,125) எனப் பாடல் அடிகள் வருகின்றன.
சுங்கம் என்பதற்கு “உல்கு” என்றும் பெயர் உண்டு. அதாவது சினம் கொண்டு விரைந்து செல்லும் சூரியனின் தேரில் பூட்டிய குதிரைகள் போன்று எப்பொழுதும் சோர்வின்றி சுங்கம் பெற பண்டகச் சாலையில் ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் குறைவின்றிக் குவிந்து காணப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.
இரவும் பகலும் கப்பல்கள் கடலுக்கு வருகின்றன, செல்கின்றன. கலத்தில் வந்த பண்டங்கள் நிலத்திற்கும் நிலத்திலிருந்து வந்த பண்டங்கள் அதாவது சோழவள நாட்டிலிருந்து வந்த பண்டங்கள் கலத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. சூரியன் ஒருபோதும் ஓய்வு கொள்ளாது இயங்குபவன். அவன் தேர் என்றும் நிற்பதில்லை. அதுபோல புகார் ( காவிரிப் பூம்பட்டினத்தின்)நகர சுங்கச்சாவடியும் ஒருபோதும் ஓய்வு கொள்வதில்லை. சுங்கம் பெறுவோர் அயர்வின்று தமது பணியைச் செய்கின்றனர். மேலும் குற்றமற்ற கதிரவன் போல நடுநிலைமையுடன் நேர்மையாக சுங்கவரி வசூலிக்கப்படுகின்றது. அநியாய வரி என யாரும் உணர்தலுக்கு இடம் இன்றி ஏற்கத் தக்கதான வரி விதிப்பும் கதிரவனைப் போல நடக்கின்றன எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார்.
“புலிபொறித்து புறம்போக்கி
மதி நிறைந்த மலி பண்டம்”
என்று வரும் அடிகளில், கடலில் நிற்கும் கப்பல்களில் வந்த பொருட்கள் இறக்குமதியாகவும் கடற்கரையில் இருந்து பொருட்கள் கப்பல்களுக்கு ஏற்றுமதியாகவும் இன்னின்ன பொருட்கள், இவ்வளவு இவ்வளவு என அளந்து அறியாத அளவுக்கு மலையெனப் பல பண்டங்கள் குவிந்து கிடக்கின்றன.
இதில், “ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்” என வரும் அடியில், ஈழத்தில் விளைந்த உணவு வகைகளும், கடாரத்தில் இருந்து வந்த செல்வங்களும் இன்னும் அரிய வகைப் பொருட்களும், பெரிய வகைப் பொருட்களும், சிறிய வகைப் பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டன என்று கூறப்படுகின்றது.
பிற பகுதிகளில் இருந்து வந்த பொருட்களைக் குவித்து வைத்து பிறர் களவு கொள்ளாதவாறு சோழ மன்னனின் காவலர் காத்து நிற்கின்றனர்.
புலிச் சின்னமாகிய இலச்சினையைப் பொறித்தே சுங்க வரி அலுவலர்கள் வெளியே பொருட்களை அனுப்பி வைக்கின்றனர் என்று வருகின்றது.
ஆகவே கரிகால் சோழனின் புலி, சுங்கச்சாவடி முதலானவற்றில் வருவாய் முத்திரையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்திலும் புலிச் சின்னம் பொறித்து வெளியே அனுப்பப்பட்டன என்பதைப் பார்க்கும்போது அப்பழங் காலத்திலேயே முறையான வணிகக் கோட்பாட்டை எம் முன்னோர் கடைப்பிடித்து வாழ்ந்திருக்கின்றனர் என்பது புலனாகின்றது, எம்மை பெருமை கொள்ளச் செய்கின்றது.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்