1
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட். இவர் கடந்த மாதம் (செப்டம்பர்) பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுக்கு மது விருந்து அளித்தார். அப்போது அங்கிருந்த காபிமேஜை உடைந்து சேதம் அடைந்தது.
இது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டோனி அபோட் உடைந்த மேஜைக்குரிய நஷ்ட ஈடு தொகையை தான் வழங்குவதாக அறிவித்தார்.