அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தனித்துவமான ‘கோதிக்’ கேக் தயாரிப்பால் பிரபலமடைந்த கிறிஸ்டின் மெக்கானெல் தனது பெற்றோரின் வீட்டை ஹாலோவீன் பண்டிகைக்காக கிட்டத்தட்ட பேய் வீடாக மாற்றியுள்ளார்.
இந்த வீட்டினை பேய் வீடாக மாற்ற மூன்று நாட்களுக்கு கடுமையான உழைத்துள்ளார். சுமார் இருநூற்று ஐம்பது அமெரிக்க டாலர்கள் செலவில் பற்கள் மற்றும் கண்களை வீட்டின் வெளிப்புறத்தில் ஒட்டி, வெறியோடு இருப்பதுபோலத் தோன்றும் இந்த வீட்டை உருவாக்கியுள்ளார்.
பெற்றோர் முதல் அனைவரும் கிறிஸ்டினின் திறமையான இந்த படைப்பைக் கண்டு அவரைப் பாராட்டி வருகின்றனர். அக்கம்பக்கத்தில் நடந்து செல்பவர்கள் முதல், சாலையில் கார் ஓட்டிச் செல்பவர்கள் வரை இந்த வீட்டு வாசலில் ஒரு வினாடி நின்று புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.