செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்

பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி | கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தல்

1 minutes read

கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், கடந்த 9 ஆண்டுகளாக ஆண்டு வந்த, கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமராக ஜஸ்டின் ட்ரூடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தின் 338 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியை சந்தித்தனர். 181 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது லிபரல் கட்சி. கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை. தற்போது பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அக்கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ருடா (43) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பியரே ட்ருடாவின் மகன் ஆவார்.

இந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி என்ற ஈழத்தமிழர் வெற்றி பெற்றுள்ளார். இது தவிர இந்திய-கனடியர்களான 19 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.