செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு முல்லைத்தீவு மாவட்ட யுவதிகள் சைக்கிளோட்டத்தில் வெற்றி

முல்லைத்தீவு மாவட்ட யுவதிகள் சைக்கிளோட்டத்தில் வெற்றி

0 minutes read

வவுனியாவில் தமிழ் சிங்கள புதுவருட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.

பெண்களுக்கான போட்டி முழு வட மாகாண ரீதியாகவும் ஆண்களுக்கான போட்டி வவுனியா மாவட்டத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும் நடத்தப்பட்டது.

1ம், 2ம், 4ம், 8ம் இடங்களைப் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள்

பெண்களுக்கான 30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நந்தீஷ்வரன் ராதிகா முதலாம் இடத்தையும் ஜெயச்சந்திரன் கலைநிலை இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

அவர்களது சக வீராங்கனைகளான திருச்செல்வம் லக்சாயினி, மயூரன் சுகந்தினி ஆகியோர் முறையே 4ஆம், 8ஆம் இடத்தையும் பெற்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குபற்றி வெற்றியீட்டியவர்களை மாவட்ட அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.