செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி வெற்றி

1 minutes read

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரி (St. John’s College) மைதானத்தில் ஆரம்பமாகின.

மாகாண மட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் 20 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற தனது முதலாவது தேசிய மட்டப் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி, தம்புத்தேகம மத்திய கல்லூரி அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில், சம்மாந்துறை தேசிய பாடசாலை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தேசிய மட்டப் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தேசிய மட்டத்தில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வெற்றியைப் பெற்றுள்ள சம்மாந்துறை தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கு பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச மக்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.