நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த நடிகர் சங்கத்தில் மூத்த நடிகர்களுக்கு கவுரவ பதவி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒரு கருத்து எழுந்தது. அதன்படி ரஜினி, கமல் ஆகியோருக்கு கவுரவப் பதவி வழங்குப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு நடிகர் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். இதை நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் மேடையில் அறிவித்தார். செயற்குழு டிரஸ்டிகளில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், நடிகர் சங்கத்தில் கவுரவ பதவிக்கு ரஜினி எதுவும் சம்மதம் தெரிவிக்காமலே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.