அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என துணை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார். ஹிலாரி கிளிண்டன் பல மாதங்களுக்கு முன்பே ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டார். தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரசார நிதியாக அவரிடம் 3 கோடி டாலர் (சுமார் ரூ. 200 கோடி) உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மாகாணங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு கட்சியினரையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தற்போதைய துணை அதிபர் ஜோ பிடன் அதிபர் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று கடந்த ஒரு மாதமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தேர்தல் இறங்குவதற்கான நேரம் கடந்துவிட்டது. எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘‘எனது ஆதரவாளர்களை திரட்டி தேர்தலில் களமிறங்கி இருக்க முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துக்கொண்டததால்தான் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். இந்த முடிவை அறிவிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் என் மகனின் மரணம்தான்” என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.