தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து அமெரிக்க – சீன உயர்கடற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர் கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிகல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்காபப்ட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவு அருகே அமெரிக்க போர்க்கப்பல் சென்றது குறித்து அமெரிக்க – சீன உயர்கடற்படை அதிகாரிகள் வீடியோ மூலமாக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அமெரிக்க சார்பில் அட்மிரல் ஜோன் ரிச்சர்ட்சன் மற்றும் சீன கடற்படை சார்பில் அட்மிரல் வு ஷென்க்லி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க கடற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில் இந்த பேச்சுவார்தை பயனுள்ளதாகவும், சிறப்பாகவும் இருந்தது என்று கூறியவர் பேச்சுவார்ததை பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.