பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணித்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர்.
துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது.
ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வீதி விதிகளை சரியாக பின்பற்றாததால் வீதி விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.
இந்த மே மாதத்தில் மட்டும் 18ஆம் திகதி நேரிட்ட விபத்தில் 13 பேரும், கடந்த 3ஆம் திகதி நேரிட்ட விபத்தில் 20 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.