செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிரியாவில் ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூடல்சிரியாவில் ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூடல்

சிரியாவில் ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூடல்சிரியாவில் ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூடல்

0 minutes read

சிரியாவில் ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூட ஐ.எஸ். தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளை இணைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிரியாவில் ரக்கா நகரில் ஒரு புது விதமான சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அதாவது ஆண் டாக்டர்கள் பணிபுரியும் மகப்பேறு ஆஸ்பத்திரிகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக ஆண் மகப்பேறு டாக்டர்கள் பணிபுரியும் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. ஏனெனில் பிரசவத்தின் போது நடைபெறும் ஆபரேசன்களை பெரும்பாலும் ஆண் டாக்டர்கள் தான் மேற்கொள்கின்றனர்.

அதற்காகவே இந்த ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு குறித்த தகவல் அறிந்தவுடன் பல ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்த ஆண் டாக்டர்கள் ஏற்கனவே வேலையை விட்டு விலகிவிட்டனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரியாவில் பெண்களின் சுகாதாரமும், அவர்களது உரிமைகளும் நசுக்கப்பட்டுள்ளதாக சமூக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.