செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் | சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் | சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை

2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் | சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் | சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை

1 minutes read

சீன அரசின் “இரு குழந்தைகள்’ கொள்கை காரணமாக வரும் 2030-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக உயரும் என அந்த நாட்டு குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை துணைத் தலைவர் வாங் பெயான் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒரு தம்பதியர் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசின் கொள்கை மாற்றத்தைத் தொடர்ந்து, குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு 2 கோடி குழந்தைகள் வரை பிறக்கும் என்பது எங்கள் கணிப்பு.
இதன் காரணமாக, 2030-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகை 145 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
2014-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சீனாவின் மக்கள் தொகை 136.8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியான சீனா, அண்மைக் காலமாக பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
அந்த நாட்டில் வயதானவர்களின் விகிதம் மிக வேகமாக அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் விகிதம் குறைந்து வருவது, வருங்காலத்தில் பொருளாதாரச் சரிவை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அந்த நாடு 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் “ஒரு தம்பதியருக்கு ஒரே குழந்தை’ என்ற கொள்கையே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பின்னடைவைச் சந்தித்து வரும் சீனப் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக, அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நான்கு நாள்களாக நடைபெற்றது.
மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை, ஒரு குழந்தைக் கொள்கை கைவிடப்படுவதாகவும், இனி தம்பதியர் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்தக் கட்சி தெரிவித்தது.
மக்கள் தொகை மேம்பாட்டை சமநிலைப்படுத்தவும், நாட்டில் வயதானவர்களின் விகிதாசாரம் அதிகரித்து வரும் பிரச்னைக்குத் தீர்வு காணவும் ஒரு குழந்தைக் கொள்கை கைவிடப்படுவதாக அந்தக் கட்சி கூறியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.