செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!

திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் சாதனை படைத்த ஜோடி!

1 minutes read

பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள்.

சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் 2006ஆம் ஆண்டு சந்தித்தனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தங்களது 31-28 வயதில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து, தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உலகின் மிகவும் குள்ளமான ஜோடி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More