சிரியாவில் பயங்கரவாத இலக்குகள் மீது தனித் தனியாக தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்க, ரஷியப் போர் விமானிகள் முதல் முறையாக தங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து அமெரிக்க கடற்படை தளபதி செஃப் டேவிஸ் கூறியதாவது: சிரியாவில் தனித் தனியாக விமானத் தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்க, ரஷியப் போர் விமானிகள், எதிர்பாரா வகையில் தங்களுக்கிடையே தாக்குதலில் ஈடுபடாமலிருக்க கடந்த மாதம் 20-ஆம் தேதி இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்ததின் ஒரு பகுதியாக, ரஷிய விமானிகளுடன் அமெரிக்க விமானிகள் சோதனை முறையில் தகவல் பரிமாற்றங்களை செய்து கொண்டனர்.
எனினும், இதனை கூட்டு ராணுவப் பயிற்சியாகக் கருத முடியாது என்றார் அவர்.
1