மிக்கைல் லெசின், அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
57 வயதான லெசின், வாஷிங்டனில் உள்ள டுபான்ட் சர்க்கிள் ஓட்டலில் தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலையில் அவரது அறை நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது லெசின் இறந்து கிடந்ததார்.
அவரது மரணத்தை வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் இன்று உறுதி செய்தது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
புதினின் நெருங்கிய ஆலோசகராக விளங்கிய லெசின், 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ரஷ்யாவின் ஊடகத்துறை மந்திரியாக இருந்துள்ளார். பின்னர், புதினின் அதிபர் மாளிகை ஊடக ஆலோசகராக 2004ம் ஆண்டு முதல் 2009 வரை பணியாற்றியுள்ளார். அவருக்கு மனைவியும் 2 குழந்தைகள், 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.