செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நுவரெலியா பஸ் விபத்தில் 40 பேர் காயம்!

நுவரெலியா பஸ் விபத்தில் 40 பேர் காயம்!

1 minutes read
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் பகுதியில் அதிசொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியது

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த பஸ் விபத்தில் சிக்கிய 40 பயணிகள் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டோரில் 7 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும், ஏனைய 33 பேர் சாதாரண சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நுவரலியா மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நுவரெலியா தனியார் விடுதி ஒன்றிலிருந்து 42 பயணிகள் திருகோணமலைக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டு அதிசொகுசு பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

அந்த பஸ் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் சென்றபோது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸைச் செலுத்திய சாரதி சாமர்த்தியமாக வீதி பாதுகாப்புத் தடையில் மோதி பாரிய விபத்தைத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.