செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதுதமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது

தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதுதமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது

1 minutes read

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) உள்ளிட்ட தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தால், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள யாழ்ப்பாணம் நகரில் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியது. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பள்ளிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
இலங்கைச் சிறைகளில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், போரின்போது அமல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழர் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
“”அரசியல் கைதிகள் அனைவரும், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் விடுதலை செய்யப்படுவர்” என வாக்குறுதி அளித்திருந்த இலங்கை அரசு, தற்போது, பின்வாங்குகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்யக் கோரி கடந்த மாதம் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களது கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், அவர்களை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியது. இந்நிலையில், சிறையில் இருந்த 30 பேரை நிபந்தனை ஜாமீனில் இலங்கை அரசு வியாழக்கிழமை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.