செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் “பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” | ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய மிரட்டல் “பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” | ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய மிரட்டல்

“பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” | ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய மிரட்டல் “பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” | ஐ.எஸ். தீவிரவாதிகளின் புதிய மிரட்டல்

0 minutes read

கடந்த 14-ம்தேதி நள்ளிரவு பாரிசில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிரான்ஸ் தவிர அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்நாடுகளை மிரட்டும் வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் “சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதலில் பங்கேற்கும் நாடுகளே, கடவுளின் ஆணைப்படி பிரான்சின் மையப்பகுதியான பாரிசை எப்படி தாக்கினோமோ அதேபோல் அமெரிக்காவின் மையமான வாஷிங்டனையும் தாக்குவோம்” என்று ஒரு ஐ.எஸ் தீவிரவாதி கூறுகிறான்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.