யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ். வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் அவர் தவிர்த்துள்ளார்.
சில வாரங்களுக்குப் பின்னர் தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.