செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பணஉதவி-ரஷிய அதிபர்40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பணஉதவி-ரஷிய அதிபர்

40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பணஉதவி-ரஷிய அதிபர்40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பணஉதவி-ரஷிய அதிபர்

1 minutes read

ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள சிலநாடுகள் உள்பட உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பணஉதவி செய்வதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பாரிஸ் நகரில் 129 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இவ்வியக்கத்தை வேரோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணமானது உலக நாடுகள் மத்தியில் வலுத்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் முனைப்பு காட்டிவரும் பிரான்ஸ் விமானப்படைகள் குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலகநாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை வகுத்து வருகின்றன. இதற்கிடையே உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு பணஉதவி செய்து வருகின்றனர் என்று ரஷியஅதிபர் புதின் குற்றம் சாட்டிஉள்ளார்.

ஜி-20 அமைப்பில் இடம்பெற்று உள்ள சிலநாடுகள் உள்பட 40 நாடுகள் உதவிசெய்து வருகின்றன என்று புதின் குற்றம் சாட்டியுள்ளது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“எங்களுடைய உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை வெளிப்படுத்துகின்றேன், ஐ.எஸ். தொடர்பான வெவ்வேறு இயக்கங்களுக்கு பணஉதவி அளிக்கப்படுகிறது. பணஉதவி எங்கிருந்து கிடைக்கப்பெறுகிறது என்பதையும் கண்டு பிடித்துள்ளோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.