செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

8 minutes read

சங்க இலக்கியங்கள் என்பவை வர்ணனைகள் மிகுந்த காவியங்களோ அல்லது இதிகாசங்களோ அல்ல. உள்ளதை உள்ளபடி சொல்வது. இயற்கையை, இயற்கை உணர்வை அப்படியே சொல்வது. எமது பண்டைய வாழ்வியலைக் காட்டி நிற்பது. எட்டுத்தொகை நூல்களில் காதல் ஒழுக்கம் சார்ந்து பாடப்பட்ட பாடல்களே மிகுதியாக உள்ளன.

கடைச்சங்கத்தில் வாழ்ந்த 475 புலவர்களில் 41 பெண் புலவர்கள் இருந்திருக்கின்றார்கள். 41 பெண் புலவர்கள் என்று கூறினாலும் இந்த எண்ணிக்கை குறித்து தமிழ் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. சமநிலைக் கல்வி என்ற கோட்பாடு அன்று இருந்தபடியால் 41 பெண் புலவர்களும் கல்வி கற்று தமது புலமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமது உள்ளத்தில் தோன்றிய காதல் ஒழுக்கத்தை பாடி இருக்கின்றனர். எழுச்சிமிகு வீரத்தை, நம் வாழ்வியலைக் காட்டி நிற்கின்றனர். இவர்கள் தமக்குள் ஏற்பட்ட அக உணர்வான காதல் ஒழுக்கத்தை மறைக்காது பாடி உள்ளனர்.

அந்த வகையில் பெண்புலவர்கள் தமது அகத்தில் எழுந்த காதல் உணர்வை எவ்வாறெல்லாம் பாடியுள்ளார்கள் என்பதை இங்கு ஆய்ந்து நோக்கலாம்.

வெள்ளி வீதியார்

வெள்ளிவீதியார் எனும் பெண் புலவரை எடுத்துக் கொண்டால் இவர் சங்க இலக்கியங்களில் 13 பாடல்களைப் பாடியுள்ளார். அகநானூற்றில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும், நற்றிணையில் மூன்று பாடல்களும் பாடியுள்ளார். இவை அனைத்துமே அகத்திணைப் பாடல்களைச் சார்ந்தவை.

இவரின் பெரும்பாலான பாடல்களில் தலைவியின் ஏக்கமும், காத்திருத்தலும், ஆற்றாமையும் வெளிப்படுகின்றன. வெள்ளிவீதியார் அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர் என்று பெருமைக்குள்ளாகின்றார்.

நற்றிணை 70

“சிறுவெள்ளாங்குருகே!
சிறுவெள்ளாங்குருகே!
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!”
என் வெள்ளிவீதியார் பாடுகின்றார். அதாவது
சிறுவெள்ளாங்குருகே! நீ எனது தலைவன் வாழும் நிலத்திலிருந்து தினமும் என் நிலத்துக்கு வருகின்றாய். இங்குள்ள நீர் நிலைகளில் மீன் உண்கின்றாய். பின் என் தலைவன் ஊருக்குச் செல்கிறாய். தினமும் எனது நிலையைப் பார்க்கின்றாய். நான் அணிந்த அணிகலன்கள் அவன் பிரிவால் என் உடலை விட்டு நெகிழ்ந்து வீழ்கின்றன. எனது துன்பத்தை அவரிடம் கூற மாட்டாயோ? எனது ஊர் வந்து மீன் உண்ட நீ இந்த நன்றியை மறக்கலாமோ? ஒருவேளை என்னிடம் அன்பிருந்தாலும் உன் மறதியால் சொல்லாமல் விடுகின்றாயோ? எனப் புலம்புவதாக அமைகிறது.
இந்தப் பாடல் “காமம் மிக்க கழி படர் கிளவி” என்ற துறையில் அமைந்துள்ளது. தலைவி காமம் மிகுதியால் கலக்கத்துடன் பேசுகின்றாள். அன்பின் மிகுதியை அஃறிணைப் பொருளான சிறுவெள்ளாங்குருகிடம் தன் நிலையை தலைவனிடம் சென்று கூறுமாறு வேண்டுவதாக அமைகின்றது.
வெள்ளிவீதியார் பாடிய பல பாடல்கள் காமம் மிக்க கழி படர் கிளவி எனும் துறையிலேயே அமைந்துள்ளது. தலைவன் இல்லம் வந்து சேர வேண்டும் என்ற பிரிவாற்றாமை பொருள்பட இந்த துறையில் பாடப்படும்.
காமம் என்ற சொல்லையே உச்சரித்தால் ஆகாது என்ற காலத்தில் இன்று நாம் வாழ்கின்றோம். சங்க இலக்கியங்களில் இச்சொல் மிகுதியாக வருகின்றது. அன்பின் நிறைவையே காமம் என அன்று அழைத்தனர்.

நற்றிணை – 348

வெள்ளி வீதியார் பாடும் இப்பாடலில் எங்கும் மகிழ்ச்சி ஆராவாரம் கொட்டிக் கிடக்கின்றது. நானோ! என் அணிகலன்கள் கழன்று என் காதலர் என் அருகில் இல்லாததால் உண்டாகும் அவல நிலையோடு இருண்டு கிடக்கும் இரவிலும் கண்மூடாமல் கலங்கிக் கொண்டிருக்கின்றேன் என்று பாடுகின்றார்.
சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதிய 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் என்பவர் வெள்ளி வீதியார் தன் சொந்த வாழ்வில் அனுபவித்த உணர்வுகளையே தனது பாடல்களில் வடித்திருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்.

அகநானூறு- 45

கரிகாலனின் மகளான ஆதிமந்தியர் தனது கணவனை காவிரி ஆற்றில் தொலைத்து விட்டு பித்தேறி அலைந்து திரிந்தார். அதுபோல நானும் பித்தேறி என் தலைவனுக்காக அலைந்து திரிவேனோ?என வெள்ளிவீதியார் பாடுகின்றார்.

ஔவையார் வாழ்த்திய
வெள்ளி வீதியார்
அகநானூறு -147

“வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானோ பல புலந்து”

என ஔவையார் பாடுகின்றார். தலைவன் பொருள் தேடும் பொருட்டு பிரிய நேரிடுகின்றது. தலைவி தானும் வெள்ளி வீதியார் போல தலைவனுடன் செல்ல விரும்புவதாக இந்தப் பாடலில் குறிப்பிடப்படுகின்றது. வெள்ளி வீதியார் பொருள் ஈட்டச் சென்ற தலைவனுடன் அவரும் சென்றார் எனத் தெரிய வருகின்றது. இதில் வெள்ளிவீதியாரின் காதல் மிகுதி கூறப்படுகின்றது. ஆக இந்த வெள்ளிவீதியாரும் சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையாரும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள் என்பது புலனாகின்றது.

சம கல்வி பெற்ற பெண் புலவர்கள் தமக்குள் ஏற்பட்ட உணர்வுகளை மறைக்காது அன்று பாடியுள்ளனர். இன்று அப்படியான இலக்கியங்கள் தோன்றுவது மிக அரிது. உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலை எம் சமூகத்தில் உள்ளது. அத்தோடு அன்று ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக காதல் ஒழுக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பகற்குறியிலும் இராக்குறியிலும் தலைவனும் தலைவியும் சந்தித்திருக்கின்றார்கள். வாயில் என அழைக்கும் பாணர், தோழி, பாங்கன் போன்றோர் அதற்கு துணைபுரிந்து வழி நடத்தி இருக்கின்றனர். இதை வெளிப்படையாக எழுதி உலகுக்கு காட்டி இருக்கின்றனர்.

அண்மைக் காலங்களில் ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதும், அந்த உணர்வை வெளிப்படையாக எழுதுவதும் ஒவ்வாத காரியம் என நினைப்பதும், பெண் தனது உணர்வுகளை அடக்கி வாழ வேண்டும் என நினைக்கும் எம் சமூகத்திற்கு சங்க காலம் என்பது மிகப் பெரும் பொற்காலமே.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 37 | பட்டினப்பாலை கூறும் புலிச் சின்னம் பொறித்த சுங்க முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More