செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 2 குழந்தைகள் திட்டத்திற்கு சீன நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை2 குழந்தைகள் திட்டத்திற்கு சீன நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை

2 குழந்தைகள் திட்டத்திற்கு சீன நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை2 குழந்தைகள் திட்டத்திற்கு சீன நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை

1 minutes read

சீனாவில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள 2 குழந்தைகள் திட்டத்திற்கு அந்த நாட்டு மக்களுக்கு போதுமான வரவேற்பு இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஒரு குழந்தை கொள்கையை செயல்படுத்தி வருகிறது. ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் 2-வது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி உள்ள நிலையில், ஒரு குழந்தை கொள்கை காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது சீன மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் முதியோர்கள். மேலும் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. இதனால் ‘ஒரு குழந்தை’ என்ற கொள்கையை கைவிடுவதாகவும், அனைத்து தம்பதிகளும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு சமீபத்தில் அறிவித்தது.

சீனாவில் செயல்படுத்தப்பட உள்ள இரு பிள்ளை கொள்கையினால் அந்நாட்டின் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும் 0.5 சதவீதம் கூடலாம் என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த திட்டம் அதிகாரபூர்வமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2 குழந்தைகள் திட்டத்திற்கு அந்த நாட்டு மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2 குழந்தைகள் திட்டம் தொடர்பாக சீன அரசின் யூத் டெய்லி என்ற இதழ் ஆய்வு ஒன்றினை நடத்தியது. சுமார் 3000 நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெண்கள்.

இந்த ஆய்வின் முடிவில் 46 சதவீதம் பேர் 2 குழந்தைகள் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 54 சதவீதம் பேர் இரண்டு குழந்தைகள் திட்டத்தை நிராகரித்துள்ளனர். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் இரண்டாவது குழந்தையை பராமரிப்பது பெரும் சுமையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.