பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானதாகவும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாதி தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று ராணுவம் மற்றும் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாரிசின் வடக்கு பகுதியில் உள்ள செயின்ட் டெனிஸ் பகுதியில் ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வரும் நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.