செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்

பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்பாபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகல்

1 minutes read

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் (44) அறிவித்துள்ளார்.
லூசியானா மாகாண ஆளுநரான அவர், அமெரிக்காவின் “ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியிலிந்து விலகுகிறேன். மிகுந்த முயற்சி செய்து, நாங்கள் பிரசாரச் கொள்கைகளை வடிவமைத்து வருகிறோம். ஆனால், முற்றிலும் வினோதமான, முடிவுகளைக் கணிக்க முடியாத தேர்தலின் போக்கு தற்போது எங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டோம்.
நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு உகந்த நேரம் இதுவல்ல. எனவே அதிபராகும் முயற்சியை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். 45 ஆண்களுக்கு முன்னர் சுதந்திரத்தையும், வாய்ப்பையும் தேடி எனது பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தனர். இந்த நிலையில், நான் அமெரிக்காவின் அதிபராக முயற்சி செய்யும் நிலையை அடைந்ததே எனக்கு மிகப் பெரிய கெளரவம் என்றார் ஜிண்டால்.
ஒபாமாவின் முதல்கட்ட ஆட்சியின்போது, அவரது அரசுக்கு எதிராக அதிரடிப் பிரசாரங்களை மேற்கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்த பாபி ஜிண்டால், குடியரசுக் கட்சியின் வளரும் நட்சத்திரமாகக் கருதப்பட்டார்.
எனினும் தற்போதைய சூழலில், குடியரசுக் கட்சி சார்பு அதிபர் பதவி வேட்பாளருக்கான போட்டியில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே பாபி ஜிண்டாலுக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவான ஆதரவே காணப்படுகிறது.
“அமெரிக்க இந்தியன் என்ற அடையாளத்திலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன்’ என்று பாபி ஜிண்டால் கூறிய கருத்தால், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையேயும் அவருக்கு ஆதரவு இல்லை எனக் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.