சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் வசூலிலும் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் எட்டாத சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படம், முதல் நாள் 15.3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும் வசூல் பெரியளவில் குறையவில்லை. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தை வாங்கிய பல விநியோகஸ்தர்கள் தற்போதே லாபம் அடைந்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதால், இன்னும் இரண்டு வாரங்களில் கண்டிப்பாக ‘எந்திரன்’ படத்தின் தமிழக மொத்த வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் கணித்திருக்கிறார்கள்.
முதல் 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.60 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறியுள்ளனர்.