செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதுமூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது

மூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதுமூன்றாம் பிறை படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது

1 minutes read

1982-ல் வெளிவந்த மூன்றாம் பிறை படத்தை யாரால் மறக்கமுடியும்? கமல், ஸ்ரீதேவி, பாலுமகேந்திரா, இளையராஜா என பல திறமைகள் கைகோத்த படமல்லவா! இந்தப் படம் ரீமேக் ஆகிறது. மூன்று மொழிகளில்.

மூன்றாம் பிறை ஹிந்தியில் சத்மா என வெளியானது. இதன் உரிமை ராஜ் சிப்பியிடம் உள்ளது. விளம்பரத்துறையைச் சேர்ந்த லாயிட் பாப்டிஸ்டா இதன் உரிமையைத் தற்போது வாங்கியுள்ளார். அவரே இதன் ரீமேக்கை இயக்கவும் உள்ளார். அவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுவே.

இதுபற்றி லாயிட் கூறும்போது: ‘சத்மா அருமையான படம்.  அது இந்தத் தலைமுறையையும் சென்று சேரவேண்டும். நான் அந்தப் படத்தைப் பலமுறை பார்த்துள்ளேன். அதை ரீமேக் செய்வது மிகவும் சவாலானது. ஆங்கிலத்தில் இயக்க முன்பு முடிவு செய்தேன். ஆனால் படம் மிகவும் மெதுவாகச் செல்வதாக சிலர் கருத்து சொன்னதால் அந்த யோசனையைக் கைவிட்டேன். சமீபத்தில் ராஜ் சிப்பியைப் பார்த்தேன். சத்மா மீதான என் ஆர்வத்தைக் கண்டு அவர் எனக்கு உரிமையை விட்டுத் தந்தார்’ என்றார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் லாயிட் தெரிவித்துள்ளார். மூன்றாம் பிறை படத்தின் இரு பாடல்கள் (பூங்காற்று புதிதானது, கண்ணே கலைமானே) ரீமேக் படத்திலும் பயன்படுத்தப்படும். மேலும் சில புதிய பாடல்களும் படத்தில் சேர்க்கப்படுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.