பாலஸ்தீனத்தை சேர்ந்த பாடகர் அஷ்ரப் பயாத். சவுதி அரேபியாவில் அப்ஹா பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது பாடல்களில் மத எதிர்ப்பு கருத்துக்களை எழுதியிருந்தார்.
எனவே, அவர் மீது சவுதி அரேபியாவின் மத பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2013–ம் ஆண்டு அவரை கைது செய்தனர். அதன் பின்னர் மீண்டும் 2014–ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றது. அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், 800 சவுக்கடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி பயாத்துக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தகவலை மேற்காசிய மனித உரிமை ஆர்வலர் ஆதம் கூகுள் தெரிவித்துள்ளார்.