உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள 2வது மிகப்பெரிய வைரம் ஆப்ரிக்க நாடானா போஸ்ட்வானாவில் உள்ள காரோவ் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
இது கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுகாரா டயமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
1,111 கேரட் மதிப்புள்ள இந்த வைரம் 65,56,40 மி.மீ. சுற்றளவு கொண்டுள்ளது. இதன் விலை இன்னும் மதிப்பிடப்படவில்லை.
முன்னதாக 1905ம் ஆண்டு 3000க்கும் அதிகமான காரட் மதிப்புள்ள வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகின் மிகப்பெரிய வைரம்.