0
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து பெய்துவரும் உறைப்பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரில் வெளியே செல்ல முடியாமல் வீட்டினுள் அவர்கள் முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது.
சாலை முழுவதும் உறைப்பனி அடர்ந்துள்ளதால் பகலிலேயே முகப்பு விளக்குகளை மிளிரவிட்டபடி ஒருசில கார்கள் மட்டுமே ஸ்ரீநகரின் பிராதன சாலைகள் வழியே சென்றன. காஷ்மீரின் மிகப்பிரபலமான தால் ஏரியை சுற்றியுள்ள சாலைகளும் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஸ்ரீநகர் – பட்காம் இடையிலான உள்ளூர் ரெயில்கள் மட்டும் மிகக்குறைவான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், பல அதிவேக ரெயில் சேவைகள் சரிபாதியாக குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், ஓடுபாதையில் கம்பளம் விரித்தாற்போல் பனி அடர்ந்திருந்ததால் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்த தனியார் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. பனி விலகி நிலைமை சீரடைந்த