செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எட்டு இயக்கங்கள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசுஎட்டு இயக்கங்கள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசு

எட்டு இயக்கங்கள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசுஎட்டு இயக்கங்கள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசு

1 minutes read

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தப்பட்ட, எட்டு இயக்கங்கள் மீதான தடையை, இலங்கை அரசு விலக்கி உள்ளது.இலங்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம், தனிநாடு கோரி, 30 ஆண்டுகளாக, ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்தது. 2009ல், புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.கடந்த ஆண்டு, மார்ச்சில், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளதாக கூறி, 16 இயக்கங்கள், 424 தனி நபர்களுக்கு எதிராக, மகிந்தா ராஜபக் ஷே தலைமையிலான முந்தைய அரசு தடை விதித்திருந்தது. அதன்பின் நடந்த தேர்தலில், ராஜபக் ஷே தோற்றார்; அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த, மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று, இலங்கை அதிபர் ஆனார். இந்நிலையில், முந்தைய ராஜபக் ஷே அரசால் தடை விதிக்கப்பட்ட இயக்கங்களில், நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காதவை எனக் கருதப்படும், எட்டு இயக்கங்கள் மீதான தடையை, இலங்கை அரசு, நீக்கியுள்ளது. இருப்பினும், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி, பிரிட்டிஷ் தமிழ் மன்றம், கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் மன்றம், கனடா தமிழர்களுக்கான தேசிய மன்றம், தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளைஞர் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு ஆகிய இயக்கங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுபான்மையின தமிழ் சமூகத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசமரச நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக, தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.