ஜேம்ஸ்பாண்ட் படங்களில் 24-வது படமாக உருவான ‘ஸ்பெக்டர்’ கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளனாலும், திரையரங்குகளில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளாலும் இப்படம் பெரிய சர்ச்சைக்குள்ளானது. இந்த சர்ச்சைகளையெல்லாம் மீறி, தற்போது இப்படம் கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய வெடிவிபத்து காட்சிக்காக இப்படம் கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. உலக சினிமாக்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெடி விபத்தை படமாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.