செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்

ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்ஐ.நா. ஊழியர் உடல் சிதறி பலி-மாலியில்

1 minutes read

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் ஆதிக்கம் செலுத்தி வந்த அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு தற்போது மீண்டும் தீவிரவாதிகளின் கையோங்கி உள்ளது. அவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மாலியில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபையின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிரவாதத்துக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் அமைதி பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைதிப் படையை சேர்ந்த சிலர் கவுண்டம் நகரில் இருந்து திம்பக்டு நகருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீவிரவாதிகள் சிலர் அந்த வாகனங்களை வழிமறித்து குண்டுகளை வீசினர். இதில் ஐ.நா. ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.